Most trusted astrology platform worldwide

onepage-mobile-menu

திருமண பொருத்தம் - 2026

இந்த விஷயத்தில், ஜாதகம் பொருத்தம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தீய விளைவுகளை குறைக்க உதவும்.

Marriage Matching in English

jathaga porutham
free jathaga porutham
jadhaga porutham online

எங்கள் விரிவான திருமண பொருத்த அறிக்கையில் இதுதான் உருவாக்கப்படுகிறது

jathaga palangaljathaga palangal in tamil

மணமகன்

மணமகனின் விவரங்கள்

    jathaga palangal in tamil online

    மணமகள்

    மணமகளின் விவரங்கள்

      marriage matching

      * திருமண பொருத்த அறிக்கை நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியில் உருவாகும்.

      What Users Say

      4.9
      ★★★★★
      Based on 706 Reviews
      +702

      Takes less than 1 minute

      Loading reviews...

      திருமணப் பொருத்தங்களில் பன்னிரண்டு பொருத்தங்களுக்கான விளக்கங்கள்

      தினப் பொருத்தம்

      தினப் பொருத்தம் என்பது மணமக்கள் இருவரின் ஆரோக்கியம், ஆயுள் மற்றும் அன்றாட மகிழ்ச்சியான வாழ்க்கையை குறிக்கும்.
      இந்தப் பொருத்தம் இருந்தால் தம்பதியினரிடையே உடல்நலக் குறைபாடுகள் குறைந்து ஆரோக்கியம் செழிக்கும். மனஉறுதியுடன் சண்டையில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ உதவும். இந்தப் பொருத்தம் இருக்கும் பட்சத்தில் கணவன்-மனைவி இருவரும் ஒரே சிந்தனை கொண்டவர்களாக இருந்து, எந்த செயலையும் ஒன்றிணைந்து செய்து வெற்றி காணக்கூடியவர்களாக இருப்பார்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் சிறப்பாக இல்லறம் நடத்த இந்தப் பொருத்தம் அவசியமானதாகும்.

      கணப் பொருத்தம்

      கணப் பொருத்தம் என்பது மணமகன் மற்றும் மணமகளின் குணாதிசயங்கள், இயல்பு மற்றும் நடத்தை ஆகியவற்றை கணிக்கப் பயன்படுகிறது.
      இந்தப் பொருத்தம் தம்பதியரின் மனப்பொருத்தத்தையும், கணவன்-மனைவி இடையேயான இணக்கத்தன்மையையும் குறிக்கிறது. இந்தப் பொருத்தம் இருக்கும் பட்சத்தில் தம்பதியரிடையே விட்டுக் கொடுத்தல், அனுசரித்து செல்லும் தன்மை ஏற்படும். இருவருக்கிடைய புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும்

      மகேந்திரப் பொருத்தம்

      மகேந்திரப் பொருத்தம் என்பது தம்பதியரின் புத்திரபாக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை குறிக்கிறது.
      திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு குழந்தைப் பாக்கியம் மற்றும் குடும்ப வாரிசுத் தொடர்ச்சி போன்றவற்றை இந்தப் பொருத்தத்தின் மூலம் கணிக்கலாம். மகேந்திரப் பொருத்தம் இருந்தால் தம்பதியினர் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான குடும்ப வாழ்க்கையை புத்திரபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்று நம்பப்படுகிறது.

      ஸ்ரீ தீர்க்கப் பொருத்தம்

      ஸ்ரீ தீர்க்கப் பொருத்தம் என்பது திருமணத்திற்குப் பிறகு பெண்ணின் நீண்ட ஆயுள் மற்றும் தீர்க்க சுமங்கலித்துவத்தை குறிக்கிறது.
      மேலும் இது குடும்பத்தின் செழிப்பையும், வலிமையான வாழ்க்கையையும் குறிக்கும் முக்கியப் பொருத்தமாகும்.

      யோனி பொருத்தம்

      யோனி பொருத்தம் என்பது கணவன்-மனைவி இடையேயான தாம்பத்திய வாழ்க்கையின் இன்பம் மற்றும் இணக்கத்தை குறிக்கிறது.
      ஒவ்வொரு நச்சத்திரத்திற்கும் ஒரு யோனி உண்டு. இந்த யோனிகள் பொருந்தினால் இருவரும் இணக்கமான தாம்பத்திய வாழ்க்கை வாழ்வார்கள் என நம்பப்படுகிறது. யோனி பொருத்தம் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சியும் இன்பமும் நிலவும்.

      ராசி பொருத்தம்

      ராசி பொருத்தம் என்பது மணமக்கள் இருவரின் ஜாதகங்களில் உள்ள ராசிகளின் ஒற்றுமையை அறிய உதவுகிறது.
      இந்தப் பொருத்தம் மணமக்களின் உறவு, இணக்கம் மற்றும் வாழ்க்கை முறைகளில் உள்ள ஒத்திசைவை குறிக்கிறது. ராசி பொருத்தத்தின் மூலம் தம்பதியரின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை நடைமுறைகளில் உள்ள இணக்கத்தை அறியலாம்.

      ராசி அதிபதி பொருத்தம்

      ராசி அதிபதி பொருத்தம் என்பது மணமகன் மற்றும் மணமகளின் ராசிகளுக்கு அதிபதிகளான கிரகங்களுக்கிடையேயான உறவை குறிக்கிறது. இந்தப் பொருத்தம் திருமண வாழ்க்கையின் இணக்கத்தையும் நீண்டநாள் நிலைத்தன்மையையும் தீர்மானிக்கும் முக்கிய அம்சமாகும். அதிபதி கிரகங்கள் நட்பு கிரகங்களாக இருந்தால் திருமண வாழ்க்கையில் கருத்து ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். விரோத கிரகங்களாக இருந்தால் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் மற்றும் புரிதல் குறைவு ஏற்படும்.

      வசியப் பொருத்தம்

      வசியப் பொருத்தம் என்பது தம்பதியருக்கிடையே உள்ள ஈர்ப்பு மற்றும் கவர்ச்சியை குறிக்கிறது.
      இது கணவன்-மனைவி இடையேயான மனரீதியான மற்றும் உடல்ரீதியான ஈர்ப்பை அறிய உதவுகிறது. இந்தப் பொருத்தம் தம்பதியருக்கிடையே இணக்கத்தையும் நெருக்கத்தையும் உறுதிப்படுத்துகிறது.

      ரஜ்ஜுப் பொருத்தம்

      ரஜ்ஜுப் பொருத்தம் என்பது மிக முக்கியமான பொருத்தங்களில் ஒன்றாகும்.
      இது திருமண வாழ்க்கையின் நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வை குறிக்கும் முக்கியப் பொருத்தமாகக் கருதப்படுகிறது.

      வேதைப் பொருத்தம்

      வேதைப் பொருத்தம் என்பது மணமகன் மற்றும் மணமகளின் நச்சத்திரங்களுக்கிடையேயான எதிர்மறைத் தாக்கங்களை அறிய உதவும் பொருத்தமாகும். இந்தப் பொருத்தம் இல்லாத பட்சத்தில் தம்பதியரிடையே நல்ல புரிதலும், பிரச்சனைகளை இணைந்து கையாளும் ஒற்றுமையும் உருவாகும்.

      நாடி பொருத்தம்

      நாடி பொருத்தம் என்பது தம்பதியரின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை குறிக்கிறது.
      இது இருவரின் நச்சத்திரங்களைப் பொருத்து அவர்களின் உடல்நல தன்மைகளை கணிக்க உதவுகிறது. நாடி பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதியருக்கு ஆரோக்கியமான திருமண வாழ்க்கை அமையும்.

      மரப் பொருத்தம்

      மரப் பொருத்தம் என்பது தம்பதியரின் நச்சத்திரங்களின் அடிப்படையில் குழந்தைப் பாக்கியத்தை குறிக்கிறது. இந்தப் பொருத்தத்தில் தம்பதியரின் நச்சத்திரங்கள் மரம், பால் அல்லது சார்பு வகைகளாக இருந்தால், அவர்களுக்கு புத்திரபாக்கியம் தடையில்லாமல் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

      பிறந்த தேதி? மூலம் திருமண பொருத்தம் எப்படி சரிபார்ப்பது?

      திருமண பொருத்தம் என்பது மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகிய விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த விவரங்களின் மூலம் அவர்களின் ஜாதகம் தயாரிக்கப்படுவதோடு, நட்சத்திரம் மற்றும் ராசி கண்டறியப்படுகிறது.

      திருமண பொருத்தம் கணக்கிடும் முறை

      இன்றைய காலத்தில், இந்த முழு செயல்முறையையும் ஆன்லைன் திருமண பொருத்தம் கருவிகள் மூலம் எளிதாக செய்து, உங்கள் திருமண பொருத்தத்தை உடனடியாக அறிந்து கொள்ளலாம். திருமண பொருத்தம் துல்லியமாக கணக்கிட, முதலில் உங்கள் தமிழ் ஜாதகம் பார்க்க  அறிக்கையைப் பார்க்குவது மிகவும் முக்கியம்.

      நட்சத்திர பொருத்தத்தின் முக்கியத்துவம்

      நட்சத்திர பொருத்தம் என்பது வேத ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் முறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது ராசியை மட்டுமல்லாமல், மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பொருத்தத்தை மதிப்பீடு செய்கிறது.

      நட்சத்திர பொருத்தம் ஏன் முக்கியம்

      சில நேரங்களில் திருமண பொருத்தம் குறைவாக இருந்தாலும், நல்ல நட்சத்திர சேர்க்கைகள் மற்றும் சாதகமான கிரக நிலைகள் இருப்பின், அந்த திருமணம் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய வாய்ப்பு உள்ளது.

      நச்சத்திரப் பொருத்தங்களில் உள்ள இந்த பன்னிரண்டு பொருத்தங்களில், குறிப்பாக தினம், கணம், மகேந்திரம், ஸ்ரீ தீர்க்கம் ஆகிய நான்கு முக்கியப் பொருத்தங்களில் ஏதேனும் ஒன்று கூட இல்லை என்றால், அந்த ஆணும் பெண்ணும் திருமண வாழ்கையில் இணைக்கக் கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது

      திருமணத்திற்கு நீங்கள் பார்க்க வேண்டிய 10 முக்கிய பொருத்தங்கள்!

      திருமணத்திற்குத் தயாராகும் இருவர் இடையில் நல்ல புரிதல் இருப்பது ரொம்ப அவசியம். கல்யாணம் செய்துகொள்ளவிருக்கும் ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கொருவர் எந்தளவு பொருத்தமா இருப்பாங்க என்று ஜாதகம் மூலம் பார்த்து எடுக்கிற ஒரு முக்கியமான முடிவுதான் இந்த திருமணப் பொருத்தம். இது உங்களுடைய அழகான எதிர்கால வாழ்க்கையைத் தாங்கிப் பிடிக்கப்போகிற ஒரு பலமான 'அஸ்திவாரம்'.

      அதோடு வாரிசு யோகம், ஆரோக்கியம், பண வசதி என்று உங்க வருங்காலத்தைப் பத்தின எல்லாத்தையுமே ஜாதகம் மூலமா முன்கூட்டியே தெரிஞ்சுக்கலாம். நீங்க ஆரம்பிக்கப்போற புது வாழ்க்கையை எந்தக் குழப்பமும் இல்லாம நிம்மதியா கொண்டு போக இந்த ஜாதக பொருத்தம் ஒரு முழு தெளிவைத் தரும்!

      நட்சத்திரப் பொருத்தம்

      1. நட்சத்திரப் பொருத்தம்

      கல்யாணம் செய்யவிருக்கும் ஆண், பெண் இவருடைய நட்சத்திரங்களை ஒப்பிட்டு, அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமா இருக்கும் என்பதை காட்டும் அறிக்கையை நாங்கள் தருகிறோம். இதில் தினப் பொருத்தம் முதல் மிக முக்கியமான ரஜ்ஜுப் பொருத்தம் வரை அனைத்து முக்கிய பொருத்தங்களையும் தருகிறோம்.

      தோஷப் பொருத்தம்

      2. தோஷப் பொருத்தம்

      ஜாதகத்துல் செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம் என்று ஏதாவது இருந்தால் பயப்படத் தேவையில்லை. இரண்டு ஜாதகத்திலும் இருக்கிற தோஷங்கள் ஒன்றுக்கொன்று சரியாக இருக்கிறதா, இல்லையென்றால் அது உங்கள் கல்யாண வாழ்க்கையை பாதிக்குமா என்பதை தெளிவாகக் காட்டுகிறோம்.

      தசா பொருத்தம்

      3. தசா பொருத்தம்

      வாழ்க்கையில் கஷ்டம், நஷ்டம் வருவது இயல்புதான். ஆனால், ஆண் பெண் இருவருக்குமே ஒரே நேரத்துல் கஷ்டமான காலம் (கூட்டு தசா) வராமல் இருக்கிறது நல்லது. நாங்கள் உங்களுடைய தசா புத்திகளை கணித்து, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்கிறோம்.

      அடிப்படை ஜாதக ஆய்வு

      4. அடிப்படை ஜாதக ஆய்வு

      நீங்கள் பிறந்த நேரத்தில் கிரகங்கள் எந்த நிலையில் இருந்தது என்பதை வைத்து உருவாக்கப்படுவது தான் ஜாதகம். இந்த ஜாதகம், தன்னுடைய குணம் மற்றும் வாழ்க்கையை பற்றிய முழு புரிதலை நமக்கு தருகிறது. இந்தத் தகவல்கள் மூலம் உங்களுடைய எதிர்காலம் பற்றிய பயம் நீங்கி, சரியான வழி உங்களுக்குக் கிடைக்கும்!

      natchathira-porutham

      நட்சத்திரப் பொருத்தம்

      திருமணப் பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தங்கள் இருக்கிறது. ஒவ்வொன்னுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. இதில் மிக முக்கியமானது ரஜ்ஜுப் மற்றும் யோனிப் பொருத்தம். இந்த ரெண்டு பொருத்தமும் சரியா அமையவில்லை என்றால், மத்த பொருத்தங்களைப் பார்க்கிறதில் அர்த்தமே இல்லை என்று சொல்லுவாங்க.

      வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் பார்த்து விட்டு கல்யாணம் செய்யலாம் என்று சொல்லுவாங்க. ஆனால் அது மட்டும் போதாது, நட்சத்திரப் பொருத்தம் என்பது 50% மட்டும்தான், ஜாதகத்தோட மத்த முக்கியமான விஷயங்களையும் சேர்த்துப் பார்க்கிறதுதான் முழுவதுமாக பொருத்தம் கணக்கிட முடியும்.

      ராகு கேது தோஷம்

      ராகு-கேது தோஷம் என்பது ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களைப் பொறுத்தது. இந்த இரண்டு கிரகங்களின் தாக்கம் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரின் வாழ்க்கையையும் பாதிக்கும். அதனால் கல்யாணம் செய்ய போகும் இருவருக்கும் ராகு-கேது தோஷம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பது மிக அவசியம்.

      ராகு: ஆசை மற்றும் கனவு உலகிற்கு இழுத்துச் செல்லும், கேது: தனிமை நிலைக்கு இழுத்துச் செல்லும். ஆகவே இந்த தோஷத்தைச் சரியாகப் பார்க்காமல் திருமணம் செய்வது வாழ்க்கையில் தேவைல்லாத குழப்பத்தை உருவாக்கும்.

      ragu-kethu-dosham
      sevvai-dosham

      செவ்வாய் தோஷம்

      பொதுவாக செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால், நம்முடைய ஜோதிடத்தின்படி இதற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் வீட்டை பொறுத்து நமக்கு வரப்போகும் பிரச்சனைகள் வேறுபடும்.

      உதாரணமாக, ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால், அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும். அதுவே நான்காம் இடத்தில் இருந்தால், அடிக்கடி வேலை மாறுவது போன்ற சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

      தசா சந்தி

      ஒவ்வொருவர் ஜாதகத்திலும் எதாவது ஒரு கிரகம் ஆளும். அந்த ஆளக்கூடிய கிரகம் வலிமையாக இருந்தால், அந்தக் காலம் நமக்கு சாதகமாக இருக்கும், அதுவே பலவீனமாக இருந்தால் நாம் பல சவால்களைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

      திருமணப் பொருத்தத்தில் இதைப் பார்ப்பது ஏன் அவசியம் என்றால், ஒருவேளை கணவன்-மனைவி இருவருக்கும் ஒரே நேரத்தில் 'கெட்ட காலம்' (தசா சந்தி) வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். அனால் ஒருவேளை ஒருவருக்கு நல்ல காலம் நடக்கும்போது மற்றவருக்குச் கெட்ட காலம் வந்தால், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

      dasha-santhi

      நீங்கள் கொடுக்கவேண்டிய மூன்று விவரங்கள்

      திருமணப் பொருத்தம் பார்க்க இந்த மூன்று தகவல்கள் மட்டும் இருந்தால் போதும்,

      • பிறந்த தேதி
      • பிறந்த நேரம்
      • பிறந்த இடம்

      உங்களை பற்றிய இந்த மூன்று விவரங்களை வைத்து, நீங்கள் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரத்தை சரியாகத் தெரிந்து கொண்டு . உங்கள் வாழ்க்கைத்துணையோடு உங்களுக்கு இருக்கும் பொருத்தத்தை நாங்கள் துல்லியமாக சொல்கிறோம்.

      அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

      • திருமணப் பொருத்தம் என்றால் என்ன?

      • திருமணத்திற்கு முன் பொருத்தம் பார்ப்பது முக்கியமா?

      • திருமணப் பொருத்தத்தை ஆன்லைனில் பார்க்க முடியுமா?

      • ஜாதகப் பொருத்தம் திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்யுமா?

      • பொருத்தம் பார்க்க என்னென்ன விவரங்கள் தேவை?